Published:Updated:

“உனக்கும் ஒரு குண்டு இருக்கு... தூத்துக்குடிக்கு போகாதேன்னு மிரட்டுனாங்க!” தூத்துக்குடியிலிருந்து ’மதுரை’ நந்தினி

“உனக்கும் ஒரு குண்டு இருக்கு... தூத்துக்குடிக்கு போகாதேன்னு மிரட்டுனாங்க!” தூத்துக்குடியிலிருந்து ’மதுரை’ நந்தினி
News
“உனக்கும் ஒரு குண்டு இருக்கு... தூத்துக்குடிக்கு போகாதேன்னு மிரட்டுனாங்க!” தூத்துக்குடியிலிருந்து ’மதுரை’ நந்தினி

தூத்துக்குடியில வெச்சு ஒருசில போலீஸ்காரங்ககிட்ட பேசுற வாய்ப்பு கிடைச்சது. அப்போ அவங்கக்கூட இந்தப் போராட்டத்தை கன்ட்ரோல் பண்ணியிருக்கலாம்.  துப்பாக்கிச்சூடு தேவையில்லாததுன்னுதான் சொன்னாங்க.

“இந்தச் சமூகத்தில் கொட்டிக்கிடக்கும் பல பிரச்னைகளை நாம இதுவரை பெரிதாக எடுத்துக்கலை. ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு மக்கள் கொஞ்சம் முழிச்சுக்கிட்டாங்க. தங்களுக்கும் தன் இனத்துக்கும் ஒரு பிரச்னைன்னா தட்டிக் கேட்கணும்னு முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. மக்களின் கைகள் ஓங்க ஆரம்பிச்சிருக்கும் இந்த நேரத்தில், அதிகாரத்தால் அடக்குமுறையைத் திணிக்குது இந்த அரசாங்கம். தூத்துக்குடியில் நடந்துட்டிருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே தீவிரமா கவனிச்சுட்டுதான் வர்றேன். 100 நாள்களும் அமைதியான வழியில்தானே மக்கள் போராடினங்க. அவங்க பிரச்னை பண்ணனும்னு நினைச்சிருந்தா, எப்பவோ பண்ணியிருக்கலாம். மக்களை வழிநடத்தவே தெரியாத தகுதியற்ற இந்த அரசு, வன்முறையைத் தூண்டி அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றிருக்கு” என ஆதங்கத்துடன் பேசுகிறார், மதுரை நந்தினி.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக தன் தந்தையோடு இணைந்து மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நந்தினி, தமிழக மக்களின் உணர்வுமிக்க போராட்டங்கள் அனைத்திலும் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறார். நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களை சுட்டுக் கொல்லும் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தைத் தொடங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“காலேஜ் படிக்கும் பெண், இளைஞர்கள், பெரியவங்க என கண் மண் தெரியாமல் எல்லோரையும் போலீஸ்காரங்க சுட்டுக் கொன்றிருக்காங்க. நியூஸ் பார்க்கும்போதெல்லாம் மனசு பதறிச்சு. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து தகவலைக் கேட்டுக்கிறதில் எனக்கு உடன்பாடில்லை. உடனே கிளம்பி மக்களோடு மக்களா அவங்களுக்கு ஆதரவு கொடுக்க தோணுச்சு. அதுதான் மறுநாள் காலையிலேயே அப்பாவோடு கிளம்பிட்டேன். பஸ் எதுவும் போகாததால், பைக்லயே போயிட்டோம். மதுரையிலிருந்து தூத்துக்குடி போகும் வழியெல்லாம் பிரசாரம் பண்ணிட்டேதான் போனோம். தூத்துக்குடி ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குள்ளே போனதும், அங்கே இருந்த அதிகாரிகள், காவல்துறையினர் என்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாங்க. உடனே இங்கிருந்து கிளம்பிடுங்கன்னு சொன்னாங்க. என்னால் போலீஸ்கிட்ட முகம் கொடுத்து பேசவே முடியலை. அவங்க மேலே அவ்வளவு கோபம். 'நீங்க போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கிறதுக்குப் பதிலா வேற வேலை பார்க்கலாம். இப்படியா காட்டுமிராண்டித்தனமா நடந்துப்பீங்க. உங்களோடு பேசவே எனக்கு விருப்பம் இல்லை'னு கத்தினேன். உடனே, என் மொபைல்போனை பிடுங்கிவெச்சுக்கிட்டு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப்போய் உட்காரவெச்சுட்டாங்க” எனக் குமுறினார் நந்தினி.

போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும்போது அங்கு இருப்பது பற்றி கேட்டால், “நான் ஐந்து வருஷமாவே போராட்ட களங்களில்தான் வாழ்ந்துட்டிருக்கேன். அதனால், எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் தூத்துக்குடிக்குப் போகும்போதுகூட, 'நீ அங்க போகாதே. ரொம்ப நாளா அரசாங்கத்தை எதிர்த்துட்டிருக்கே. இந்தச் சூழ்நிலையில அங்கே போனால் உனக்கும் ஒரு குண்டு தயாராவெச்சிருப்பாங்க. பார்த்ததும்  சுட்டுருவாங்க'னு மிரட்டினாங்க. யார் மிரட்டலுக்கும் நான் காது கொடுக்கலை. உயிருக்குத் துணிஞ்சுதான் போனேன். தூத்துக்குடியில் ஒரு சில போலீஸ்காரங்ககிட்ட பேசும் வாய்ப்பு கிடைச்சது. அவங்களே 'இந்தப் போராட்டத்தை கன்ட்ரோல் பண்ணியிருக்கலாம். துப்பாக்கிச் சூடு தேவையில்லாதது'னு சொன்னாங்க. இதுல போலீஸ்காரங்களுக்கே விருப்பம் இல்லை. முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. பிரச்னையைச் சரிபண்ணத் தெரியாமல் தன் மக்களையே சுட்டுக்கொன்ற இந்த அரசாங்கம், ஆட்சி நடத்துறதுக்கே தகுதியில்லாதது” என ஆக்ரோஷமாக கர்ஜிக்கிறார் நந்தினி.