Published:Updated:

இலங்கைக்கு எதிராக தீர்மானம்: அமெரிக்க அமைச்சரிடம் சுப்பிரமணியன்சாமி எதிர்ப்பு!

இலங்கைக்கு எதிராக தீர்மானம்: அமெரிக்க அமைச்சரிடம் சுப்பிரமணியன்சாமி எதிர்ப்பு!
இலங்கைக்கு எதிராக தீர்மானம்: அமெரிக்க அமைச்சரிடம் சுப்பிரமணியன்சாமி எதிர்ப்பு!
இலங்கைக்கு எதிராக தீர்மானம்: அமெரிக்க அமைச்சரிடம் சுப்பிரமணியன்சாமி எதிர்ப்பு!

வாஷிங்டன்: இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அமெரிக்க அமைச்சரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி நேரில் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகள் மீற பட்டுள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்த அறிக்கையில் சில திருத்தங்களை செய்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானததை 30 நாடுகள் ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்தியா தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
 
இந்த நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி வாஷிங்டனில், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சர் ராபர்ட் பிளேக்கை சந்தித்து பேசினார்.
 

##~~##
அப்போது., ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று சாமி வலியுறுத்தினார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகள் ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும் என்றும், இதன் மூலம் விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
 
சுமார் 1 மணி நேரம் இதுகுறித்து அவர்  ராபர்ட் பிளேக் மற்றும் அதிகாரிகளுடன் பேசினார்.
 
இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சாமி கூறும்போது, இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்றும், தான் கூறியது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார்.மேலும்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அரசு விசாரணை மேற்கொண்டால் போதும் என்றும், சர்வேதச குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.