Published:Updated:

கூடங்குளத்தில் குருஷேத்திர போர் வெடிக்கும்- உதயகுமார் எச்சரிக்கை

கூடங்குளத்தில் குருஷேத்திர போர் வெடிக்கும்- உதயகுமார் எச்சரிக்கை
கூடங்குளத்தில் குருஷேத்திர போர் வெடிக்கும்- உதயகுமார் எச்சரிக்கை
கூடங்குளத்தில் குருஷேத்திர போர் வெடிக்கும்- உதயகுமார் எச்சரிக்கை

நெல்லை: அணுஉலையை திறக்க முயற்சித்தால் அதற்கு எதிராக கூடங்குளத்தில் குருஷேத்திர போர் வெடிக்கும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், இடிந்தகரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயகுமார், நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் மத்திய - மாநில அரசுகள் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை மதிக்கவில்லை.

தேர்தல் வரும் போது அவர்கள், மக்களை சந்திக்க வேண்டும். அப்போது, மக்களை மதிக்காதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

அணுமின் நிலைய நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லிக் கொண்டு வருகிறது. அங்கு நடந்துள்ள மரணங்கள் உள்ளிட்ட விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் திட்டச் செலவுக்கு கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எதற்காக இந்த கூடுதல் நிதி என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. அதை மறைக்கவே போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக செய்தி பரப்புகிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது இறந்து பிறந்த குழந்தை. அது செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை அணுஉலையை திறக்க முயற்சித்தால் அதற்கு எதிராக கூடங்குளத்தில் குருஷேத்திர போர் வெடிக்கும் என்று உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

- ஆண்டனிராஜ்