Published:Updated:

மார்ச் 22 வரை மத்திய அரசுக்கு மீனவர் சங்கம் கெடு

Vikatan Correspondent
மார்ச் 22 வரை மத்திய அரசுக்கு மீனவர் சங்கம் கெடு
மார்ச் 22 வரை மத்திய அரசுக்கு மீனவர் சங்கம் கெடு

ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீன்வர்களை வரும் 22ஆம் தேதிக்குகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்று மீனவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மார்ச் 22 வரை மத்திய அரசுக்கு மீனவர் சங்கம் கெடு

ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர் சங்க கூட்டம் என்.ஜே போஸ் தலைமையில் இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 53 மீனவர்களையும், ஒன்பது விசைப்படகுகளையும் விடுவிக்கும் வரை அனைத்து மீனவர்களும் மீன்பிடிக்க செல்வது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்த வரும் 22ஆம் தேதிக்குள் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை எனில், அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் மீன்வர்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இரா.மோகன்


படம்: உ. பாண்டி