Published:Updated:

கோவையில் 6வது நாளாக மாணவர்கள் போராட்டம்!

கோவை: இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்ககெடுப்பு நடத்த வலியுறுத்தி கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று 6 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இதேபோல், கோவை பாரதியார் பல்கலைகழக மாணவர்கள் ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தாலும் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்தும், இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனொரு பகுதியாக கோவை சட்ட கல்லூரி மற்றும் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 19 பேர் ஆறாவது நாளாக மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

##~~##
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 5 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள நிலையிலும் மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராதது வருத்தமளிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் எழுச்சி அடைந்துவிடக்கூடாது என்பதற்காக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும், யாராலும் மாணவர்களின் போராட்டத்தை நீர்த்துபோக செய்து விட முடியாது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று கோவை பாரதியார் பல்கலை மாணவர்கள் 26 பேர் ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ச.ஜெ.ரவி