Published:Updated:

`26 கோரிக்கைகள்’ - ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊராட்சி செயலாளர்கள், பதிவுத்துறை எழுத்தர்கள் ஆகியோருக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரியும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாகக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில், உள்ள 19 ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள ஊரக வளர்ச்சித்துறையினர் இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 2,000 பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாகப் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்கள், ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால் ஊராட்சிப் பகுதிகளில் குடிதண்ணீர், சுகாதாரம் ஆகிய அடிப்படைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.