Published:Updated:

இந்திய வரைபடம் எரிக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையி்ல் இந்திய வரைபடத்தை எரிக்க முயன்ற நாம் தமிழர் கட்சியிரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் இந்திய வரைபடத்தை எரி்த்து நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

##~~##
சுமார் 180 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ள மாணவர்கள், வரும் 20ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்திய வரைபடம் எரிக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

திருவண்ணாமலையை அடுத்த தென்பள்ளிப்பட்டு அகதிகள் முகாமில் 100 பேர் இன்று குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

செய்தி& படம்: பா.கந்தகுமார்