Published:Updated:

துறைமுகத்தை முற்றுகையிடுவோம்: மீனவர்கள் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் மீனவ படகு மீது சரக்கு கப்பல் மோதியது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் துறைமுகத்தை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரும் மேலும் இரண்டு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்குக் கப்பல் ஒன்று மீனவர்கள் சென்ற படகின் மீது மோதியது. இதில் பலத்த சேதம் அடைந்த மீன்பிடி படகு கடலில் மூழ்கியது. இதில் மீனவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மற்ற இரண்டு மீனவர்களும் நீந்தி கரைக்குவந்து சேர்ந்தனர்.

##~~##
இந்த விபத்தில் தொடர்புடைய கப்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், ஆனந்தன் என்ன ஆனார் என்று கண்டறிய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி மீனவர்கள் இன்று துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.
மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சென்னை துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் சம்பவம் நடந்ததாக கூறப்படும் தினத்தன்று அந்த வழியே எட்டு கப்பல்கள் வந்துள்ளன.
இதில் எந்த கப்பல் மோதி விபத்து நேர்ந்தது என்று விசாரணை நடத்த வேண்டும். வல்லுனர் குழுவைக் கொண்டுதான் இதை கண்டறிய முடியும் என்பதால் அதற்கு கால அவகாசம் அளிக்கும்படி கேட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், போராட்டத்தை ஒத்திவைத்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 5000 ஃபைபர் படகுகளில் வந்து சென்னை துறைமுகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்து கலைந்து சென்றனர்.