Published:Updated:

சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கைது (படங்கள்)

சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கைது (படங்கள்)
சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கைது (படங்கள்)

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி சுங்கத்துறை அலுவலகத்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் முற்றுகையி்ட்டதால் கைது செய்யப்பட்டனர்.

சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கைது (படங்கள்)

ஈழத்தில் நடந்த இன படுகொலைக்கு ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், ஐ.நா உதவியுடன் சர்வதேச வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இந்திய அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கைது (படங்கள்)

அதன்படி, இன்று காலை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட வழக்கறிஞர்கள், சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரே உள்ள சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

##~~##

அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், பி்ன்னர் கைது செய்தனர்.

சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கைது (படங்கள்)

தமி்ழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் அனைத்து தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கைது (படங்கள்)

அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளனர். அதன்பிறகு மாலையில் பத்திரிக்கையாளர்களை சந்தி்த்து போராட்ட அறிவிப்பை மாணவர்கள் வெளியிடுகின்றனர்.

சென்னை சத்யபாமா பொறியியல் கல்லூரி மாணவிகள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்