Published:Updated:

மாணவர்கள் போராட்டம். போலீஸ் அத்துமீறல்!!

சேலம்: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக‌ சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து வருகிறது.
மாணவர்கள் போராட்டம். போலீஸ் அத்துமீறல்!!
உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் 7 பேரின் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கும் நிலையில்  
சேலத்தில் உள்ள மற்ற அனைத்து கல்லூரிகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் சேலம் சட்டக்கல்லூரியில் இன்று  காலை கூடினார்கள்.
மாணவர்கள் போராட்டம். போலீஸ் அத்துமீறல்!!
சட்டக்கல்லூரியில் இருந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை  ஊர்வலமாக செல்ல தொடங்கினார்கள்.

போலீஸாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தப்பட்டதால் வழி நெடுக காவல்துறை குவிக்கப்பட்டு இருந்தது. சுமார் 11 மணிக்கு சட்டக்கல்லூரியில் இருந்து புறப்பட்ட மாணவ, மாணவிகள் ராஜபக்சவின் உருவ பொம்மையை பாடையில் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
 
மாணவர்கள் போராட்டம். போலீஸ் அத்துமீறல்!!
சட்ட கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  செல்லும் முக்கிய சாலைக்கு வந்ததும் காவல்துறையால் மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாணவர்கள் போராட்டம். போலீஸ் அத்துமீறல்!!
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர்  குண்டுக்கட்டாக தூக்கி  வாகனத்தில் ஏற்றிச் செல்லவே அந்த இடம் பரப்பரப்பானது. 
இந்த செய்தியை பதிவு செய்துக்கொண்டிருந்த தனியார்  டிவி நிருபர் ஒருவரும் காவல்துறை எஸ்.ஐ. தியாகராஜனால் தாக்கப்படவே, நிருபரின் கையில் அடிப்பட்டு அவரின் சட்டையும் கிழிந்தது. 
மாணவர்கள் போராட்டம். போலீஸ் அத்துமீறல்!!
காவல் துறையின் இந்த அத்து மீறலை  கண்டித்து பத்திரிக்கையாளர்கள் காவல்துறையை முற்றுகையிட இறுதியில் காவல்துறையினர் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
- வீ..கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜய குமார்