Published:Updated:

ஈழ தமிழருக்கு ஆதரவாக வைகோ தாயார் உண்ணாவிரதம்! (படங்கள்)

ஈழ தமிழருக்கு ஆதரவாக வைகோ தாயார் உண்ணாவிரதம்! (படங்கள்)
ஈழ தமிழருக்கு ஆதரவாக வைகோ தாயார் உண்ணாவிரதம்! (படங்கள்)

நெல்லை: தனித் தமிழ் ஈழத்தை வலியுறுத்தி வைகோவின் சொந்த ஊரான‌ கலிங்கப்பட்டியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில்  வைகோவின் தாயார் மாரியம்மாளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
.
இலங்கை தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்‌ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும், இனப்படு கொலை தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும், தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கலிங்கப்பட்டியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
 

ஈழ தமிழருக்கு ஆதரவாக வைகோ தாயார் உண்ணாவிரதம்! (படங்கள்)

கலிங்கபட்டி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் காலை 9.05 மணிக்கு தொடங்கியது. உண்ணாவிரத போராட்டத்தை ம.தி.மு.கவின் அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் வைகோவின் சகோதர ருமான வை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக் கப்பட்டுள்ள‌ன. ம‌க்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் உண்ணாவிரத பந்தலில் திரண்டு உள்ளனர்.

உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டு இருந்த பாலச்சந்திரன் உருவ படத்துக்கு மாலை அணிவித்த வைகோவின் தாயார் மாரியம்மாள், தள்ளாத முதுமையிலும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
 

ஈழ தமிழருக்கு ஆதரவாக வைகோ தாயார் உண்ணாவிரதம்! (படங்கள்)



இது பற்றி கிராமத்தினர் கூறுகையில், ‘'அம்மாவுக்கு வயசு எண்பதுக்கு மேல இருக்கும். 1990-ல் விடுதலைப்புலிகளை சேர்ந்த 37 பேர் காயமடைந்த நிலையில் இந்த கிராமத்திற்கு வந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற மாரியம்மாள், காயமடைந்த விடுதலைப்புலிகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் அவர்களை தனது வீட்டில் தங்க வைத்து உபசரித்தார். இந்த தகலை தெரிந்த தமிழக அரசு இதற்கக வைகோவின் தம்பி ரவிச்சந்திரனை தடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத் தது. அந்த அளவுக்கு இந்த அம்மையாருக்கு ஈழத் தமிழர்கள் மீது அக்ககறையும் ஆர்வமும் உண்டு. அந்த பாசத்திலேயே இப்போது தள்ளாத வயதிலும் எங்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார்" என்றார்கள், நெகிழ்ச்சியுடன்.

ஈழ தமிழருக்கு ஆதரவாக வைகோ தாயார் உண்ணாவிரதம்! (படங்கள்)


இந்த போராட்டத்தில் ம.தி.மு.க நெல்லை மாவட்ட செயலாளர் ப.அ.சரவணன், மாநகர செயலாளர் பெருமாள், இணையதள் ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமதுஅலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உள்ளனர்.

ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்