Published:Updated:

நாகை மீனவர்கள் 25ஆம் தேதி ரயில் மறியல்

நாகை மீனவர்கள் 25ஆம் தேதி ரயில் மறியல்
நாகை மீனவர்கள் 25ஆம் தேதி ரயில் மறியல்

நாகை: தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தி வரும் திங்கள் கிழமை நாகை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று நாகை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டிணம் நம்பியார் நகர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அரிவாளால் வெட்டியதை கண்டித்தும், இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றிட வேண்டியும் நாகை மாவட்ட மீனவர்கள் கொதிப்புடன் காணப்படுகின்றனர்.

##~~##
இந்த நிலையில், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நாகையில் கூடி ஆலோசனை செய்த அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடப்போவதாக முடிவெடுத்தார்கள்.
அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கான மீனவர்கள் கூடி மத்திய அரசுக்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர். வரும் 25ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ரயில் மறியல் செய்யப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கரு.முத்து