Published:Updated:

மணிமுக்தாறை சுத்தம் செய்யுங்கள்! - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

மணிமுக்தாறை சுத்தம் செய்யுங்கள்! - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

மணிமுக்தாறை சுத்தம் செய்யுங்கள்! - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

மணிமுக்தாறை சுத்தம் செய்யுங்கள்! - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

மணிமுக்தாறை சுத்தம் செய்யுங்கள்! - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

Published:Updated:
மணிமுக்தாறை சுத்தம் செய்யுங்கள்! - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் முன்பு மணிமுக்தாறு அமைந்துள்ளது. விருத்தாசலம் நகரின் மத்தியில் நகரை அழகாக இரண்டாகப் பிரிக்கிறது இந்த ஆறு. காசியைவிட வீசம் அதிகம் விருத்தகாசி என்று கூறப்படும் விருத்தாசலத்தில், நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தாறு, கழிவு நீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசி, இன்று விருத்தாசலத்தின் கூவமாக மாறியுள்ளது.

நகரில் ஜங்ஷன் ரோடு, பழமலைநாதர் நகர், ஆயியார் மடம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனை, வீடுகள், கடைகளில் உள்ள கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு ஆற்றின் நடுவே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளது. விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்கள் கோயில்களில் நடைபெறும் ஆடி வெள்ளித் திருவிழாவுக்கு மணிமுக்தாற்றில் இருந்து அலகு போட்டு, செடல் எடுத்துச் செல்வது வழக்கம். இதையடுத்து மணிமுக்தாற்றை பக்தர்களின் நலன் கருதி சுத்தம் செய்யக் கோரி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சிங்காரவேல், கர்ணன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், நகராட்சி அலுவலர் பாலுவை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது பொது மக்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள், ``பொதுமக்களின் குறைகளை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை. குறைகளைத் தெரிவிக்க வந்த பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய நகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரினார்கள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் விநாயமுருகன் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism