Published:Updated:

கல்லூரிகள் நாளை திறக்கப்படாது!

கல்லூரிகள் நாளை திறக்கப்படாது!
கல்லூரிகள் நாளை திறக்கப்படாது!

சென்னை: "தமிழகத்தில் நாளை கல்லூரிகள் திறக்கப்பட மாட்டாது" என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் காரணமாக மூடப்பட்ட கலைக்கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என்றும், பொறியியல் கல்லூரிகளை திறப்பது பற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலையில் எஸ்.எம்.எஸ். தகவல் வெளியானது.

இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில்,  நாளை கல்லூரியை திறப்பது பற்றி எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்தனர்.

##~~##
கல்லூரிகளை திறந்தால் உரிய போலீஸ் பாதுகாப்பும் போடவேண்டும். இதனால் அதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற எந்தவிதமான தகவல்களும் வரவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே நாளை கல்லூரிகள் திறக்கப்படாது. இதுபற்றி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இந்த மாதம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்கப்படும் என்றே தெரிகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி அன்றே அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.