Published:Updated:

கல்பாக்கம் அணுமின் நிலையம் முற்றுகையிட்ட மக்கள் மீது போலீஸ் தடியடி: 10 பேர் காயம்

சென்னை: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மக்கள்,  சீரான மின்சாரம், கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை செய்து தரக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது நாளாக இன்றும் தொடரும் போராட்டம் உச்ச கட்ட நிலையை அடைந்தது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

##~~##
அப்போது, பொதுமக்களை கலையும் படி போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், பொதுமக்கள் இதனை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து முழக்கமிட்டபடியே அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதையடுத்து, பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் நாலாபக்கமும் பொதுமக்கள் சிதறி ஓடினர். போலீஸார் நடத்திய தடியடியில் பெண்கள் உள்பட 10 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த 10 பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.