Published:Updated:

பல்லவனை தரமாட்டோம் - திருச்சியில் போராட்ட மேகம்

பல்லவனை தரமாட்டோம் - திருச்சியில் போராட்ட மேகம்
பல்லவனை தரமாட்டோம் - திருச்சியில் போராட்ட மேகம்

திருச்சி: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்குடி வரை நீட்டிக்க திருச்சியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதை தடுக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவது குறித்து இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தினமும் பகலில் சென்னையிலிருந்து திருச்சி வந்து கொண்டிருக்கும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து காரைக்குடி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்க‌ப்பட்டது. இதை எதிர்த்து சிவகங்கை மக்கள், ரயிலை சிவகங்கை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் மறியல் போராட்டம் வரை போனார்கள். தொகுதியின் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வான குணசேகரனே போராட்டத்தை வழிநடத்தி கைதானார்.

##~~##
அதற்கே இன்னும் விடை தெரியாத நிலையில் இப்போது திருச்சியிலும் போராட்ட மேகம் சூழ்ந்திருக்கிறது. பல்லவன் ரயிலை காரைக்குடி வரை நீட்டித்தால் அது சென்னை டூ காரைக்குடி ரயிலாகிவிடும்; திருச்சிக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்து இருக்கைகளும் குறைக்கப்படும். எனவே பல்லவனை காரைக்குடிக்கு விடமாட்டோம், கேட்டால் தரவும் மாடோம்" என்று சொல்லி அங்குள்ள வர்த்தகர்களும் பொதுநல அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். அவர்கள் இது தொடர்பாக  தொடர்ந்து போராட்டம் ஆர்ப்பாட்டம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மலைக்கோட்டை பல்லவன் எக்ஸ்பிரஸ் மீட்புக்குழு திருச்சியில் கூடி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது. அனைத்துக் கட்சியினரும் வர்த்தக அமைப்பினரும் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பிக்கள் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
ப்ரீத்தி கார்த்திக்