Published:Updated:

436 பேர் கைதுக்கு எதிர்ப்பு: கல்பாக்கத்தில் கடையடைப்பு

436 பேர் கைதுக்கு எதிர்ப்பு: கல்பாக்கத்தில் கடையடைப்பு
436 பேர் கைதுக்கு எதிர்ப்பு: கல்பாக்கத்தில் கடையடைப்பு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது கைது செய்யப்பட்ட 436 பேரை விடுவிக்க கோரி கல்பாக்கத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

வேலைவாய்ப்பு, தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒய்யாலிகுப்பம், சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 5 கிராம மக்கள் கடந்த 25ஆம் தேதி கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

##~~##
அப்போது, 436 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்பாக்கத்தி்ல் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து 250 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.