Published:Updated:

ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல்

ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல்
ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 19 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல்

கடந்த 13ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, ஏப்ரல் 11ஆம் தேதி வரை காவலி்ல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

##~~##
இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது.
ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல்

இந்த நிலையில் மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி நாளை மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்கச்சிடம் - பாம்பன் இடையே இந்த மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

படங்கள்: உ.பாண்டி