Published:Updated:

அமைச்சர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

அமைச்சர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு
அமைச்சர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

அமைச்சர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

மதுரை முனிச்சாலையை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது வீடு மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தின் அருகே உள்ளது. இவர் தற்போது அங்கு புதியதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில்தான் கிழக்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டி மாமூல் கேட்டு மிரட்டியதுடன் தன்னை தாக்கிவிட்டார் என்று புகார் எழுப்பி இருக்கிறார் தங்கவேல்.
 

அமைச்சர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘என்னை கேட்காமல் எப்படி வீடு கட்டலாம் என்று கேட்ட கிழக்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டி, என்னை அவரது அலுவலகத்துக்கு வந்து பார்க்கும்படி சொன்னார். நானும் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். என்னிடம் லட்சம் ரூபாய் மாமூல் கேட்டார். நான் கொடுக்க மறுக்கவே அவரும் அவரது ஆட்களும் என்னை கடுமையாக தாக்கினார்கள். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’’ என்றார் பரிதாபமாக.

##~~##
தொடர்ந்து இன்று தங்கராஜின் சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் தங்கராஜுக்கு நியாயம் தேடித்தர வேண்டும் என்று கோரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்திய செல்லூர் ராஜூ கிழக்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக சொல்லி இருக்கிறார்.
சல்மான்

படங்கள்:
காளிமுத்து