Published:Updated:

கலெக்டருடன் பேச்சுவார்த்தை தோல்வி: மீனவர்கள் ரயில்கள் மறியல் ( படங்கள் )

கலெக்டருடன் பேச்சுவார்த்தை தோல்வி: மீனவர்கள் ரயில்கள் மறியல் ( படங்கள் )
கலெக்டருடன் பேச்சுவார்த்தை தோல்வி: மீனவர்கள் ரயில்கள் மறியல் ( படங்கள் )

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

கலெக்டருடன் பேச்சுவார்த்தை தோல்வி: மீனவர்கள் ரயில்கள் மறியல் ( படங்கள் )

\ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மீனவர்களை கடந்த 27ஆம் தேதி வரை சிறை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை ஏப்ரல் 11ஆம் தேதி வரை சிறை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

##~~##
இதனிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 17 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
மீனவர்களின் வேலை நிறுத்தத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், மீனவர்களை உடனடியாக மீட்டு வர கோரியும் மீனவர்கள் இன்று  தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் சங்கம் கூறியிருந்தது.
கலெக்டருடன் பேச்சுவார்த்தை தோல்வி: மீனவர்கள் ரயில்கள் மறியல் ( படங்கள் )

இந்த நிலையில் இன்று காலை மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்த குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் திட்டமிட்டபடி இன்று மாலை மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.  ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலை தங்கச்சிமடத்தில் மறித்த மீனவர்கள், போராட்டம் நடத்தினர்.

கலெக்டருடன் பேச்சுவார்த்தை தோல்வி: மீனவர்கள் ரயில்கள் மறியல் ( படங்கள் )

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கச்சிமடத்திலிருந்து சுமார் 2 கி.மீ.தூரம் ரயில் பாதை நெடுகிலும் திரண்ட மீனவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றமுடியாமல் போலீஸார் திணறினர். இதனால் ராமேஸ்வரம் சென்னை ரயில் சுமார் ஒருமணிநேரம் நிறுத்தப்பட்டது.

கலெக்டருடன் பேச்சுவார்த்தை தோல்வி: மீனவர்கள் ரயில்கள் மறியல் ( படங்கள் )

இதையடுத்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்  லாரன்ஸ்  ரயில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மீனவர்கள் ரயில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி