Published:Updated:

ஏப்.3ல் கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் வீடு முற்றுகை!

ஏப்.3ல் கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் வீடு முற்றுகை!
ஏப்.3ல் கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் வீடு முற்றுகை!
ஏப்.3ல் கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் வீடு முற்றுகை!

கூடங்குளம் அணு விஞ்ஞானிகள், அணுமின் நிலைய ஊழியர்களின் குடியிருப்புகளை வரும் 3ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக அணு உலை எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  அணு உலை எதிர்ப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷிய நாடு அளித்த தரமற்ற உதிரி பாகங்களைக் கொண்டு, கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அணு உலையில் அடிக்கடி மரணம் நேர்ந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு அணுமின் நிலையத்தில் இருந்து வெளியான நச்சுவாயு காரணமாக மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் கூடங்குளம் பகுதி மக்கள் ஒருவித பீதியில் வாழ்ந்து வருகிறார்கள். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் அணுமின் நிலையத்தை அமைத்ததோடு மட்டும் இல்லாமல், உரிய முறையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியும் கொடுக்கவில்லை.

##~~##
உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி அமைக்கப்பட்ட இந்த அணு உலையை மூடக்கோரி வரும் 3ஆம் தேதி அணு விஜய் நகரில் முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம். அன்றைய தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமாட்டார்கள். கடையடைப்பு போராட்டமும் நடைபெறும்.
அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், மில்டன் மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள், போராட்டக் குழுவினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், அடுத்தகட்ட போராட்டம் பற்றிய இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.