Published:Updated:

ஏப்ரல் 3ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

ஏப்ரல் 3ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
ஏப்ரல் 3ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
ஏப்ரல் 3ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : இலங்கைக்கு எதிரான மாணவர்களி்ன் போராட்டம் சற்று ஓய்ந்த நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது.

தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் விடுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.ஆனாலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

##~~##
தற்போது மாணவர்களின் போராட்டம் சற்று ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில் வரும் 3ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும் துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.