Published:Updated:

19 நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன!

19 நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன!
19 நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன!

சென்னை: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துக் கல்லூரிகளும் 19 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.
 

19 நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன!

ஈழத் தமிழர்களைக் கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டம் வலுபெற்றதால் , கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தின் காரணமாக, தமிழகத்தில் மூடப்பட்ட அனைத்துக் கல்லூரிகளும், 19 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.

சனி, ஞாயிற்று கிழமைகளில் கல்லூரிகளை திறந்து வகுப்புகளை நடத்தவும், கல்லூரி நேரத்தை தவிர்த்து கூடுதலாக இரண்டு மணி நேரம் வகுப்புகளை நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தேர்வு நெருங்கி வருவதால், கல்லூரி வகுப்புகளுக்குச் செல்ல முடிவு செய்துள்ள மாணவர்கள், கல்வி பாதிக்காத அளவில் தங்கள் போராட்டத்தைத் தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

##~~##
அதன்படி கல்லூரி வகுப்புகளுக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து செல்ல மாணவர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மூடப்பட்ட சட்டக்கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.