Published:Updated:

சேலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் (படங்கள்)

சேலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் (படங்கள்)
சேலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் (படங்கள்)

சேலம்: சேலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது.
 

சேலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் (படங்கள்)

19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன.
 

சேலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் (படங்கள்)

கல்லூரிகளை திறப்பதால் மீண்டும் மாணவர் போராட்டம் வெடிக்குமோ என்று அரசு தரப்பில் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நிலையில், மாநிலத்தின் எந்த இடத்திலும் போராட்டங்கள் நடந்ததாக இதுவரை  தகவல் இல்லை.
 

சேலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் (படங்கள்)

இந்த நிலையில், சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஈழப் போராட்ட நிகழ்வுகளின் போது திருச்சியிலும் விருதுநகரிலும் மாணவர்களை தாக்கிய காங்கிரஸாரைக் கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
 

சேலத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் (படங்கள்)

போலீஸார் வந்து சமாதானம் செய்த பிறகு போராட் டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பினர்.

மாணவர்கள் மறியலை அடுத்து, கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

வீ.கே.ரமேஷ்

படங்கள்:
விஜயகுமார்