Published:Updated:

சுயநலத்திற்காக முதல்வருக்கு தவறான தகவல் கொடுத்த அமைச்சர்? - கொந்தளிக்கும் விவசாயிகள்

சுயநலத்திற்காக முதல்வருக்கு தவறான தகவல் கொடுத்த அமைச்சர்? -  கொந்தளிக்கும் விவசாயிகள்
சுயநலத்திற்காக முதல்வருக்கு தவறான தகவல் கொடுத்த அமைச்சர்? - கொந்தளிக்கும் விவசாயிகள்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் உள்ளது உப்பாறு அணை. 6,300 ஏக்கர் பாசனம் கொண்ட இந்த அணைக்கு மழை நீர் மட்டுமே நீர் ஆதாரம். கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணை முழுவதுமாக ஒரு முறை கூட நிரம்பவில்லை. அதனால் இதை நம்பி இருக்கும் நிலங்களில் பெரும்பகுதி விவசாயம் பொய்த்துக் கிடக்கிறது. இந்த நிலையில் தான் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு எதிராக ஒரு திடீர் குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது.  

சுயநலத்திற்காக முதல்வருக்கு தவறான தகவல் கொடுத்த அமைச்சர்? -  கொந்தளிக்கும் விவசாயிகள்

உப்பாறு அணையின் பாசனப்பகுதி வளம் பெற வேண்டும் என்றால், ஆண்டில் 9 மாதங்கள் தண்ணீர் ஓடும் பி.ஏ.பி. எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் உப்பாறுபாசன விவசாயிகள். இதை ஏற்று, உப்பாறு பாசனக்கால்வாய் பி.ஏ.பி. கால்வாயுடன் இணைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்த முதல்வர், திட்டத்திற்காக 8 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கபடும் என்று அறிவித்தார்.

சுயநலத்திற்காக முதல்வருக்கு தவறான தகவல் கொடுத்த அமைச்சர்? -  கொந்தளிக்கும் விவசாயிகள்

இந்த அறிவிப்பு உப்பாறு பாசன விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் பி.ஏ.பி. விவசாயி களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் பின்னணியில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் சதியுள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் பி.ஏ.பி விவசாயிகள். அமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வோம் என விகடன் டாட்காமிடம் ஆவேசமாக பேசினார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மதுசூதனன்.

'' பி.ஏ.பி.கால்வாயுடன் உப்பாறு பாசனக் கால்வாய் இணைப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் சுய நலத்துடன் செயல்பட்டுள்ளார். உப்பாறு அணைக்கு மிக அருகில் உள்ளது அமராவதி அணை.

சுயநலத்திற்காக முதல்வருக்கு தவறான தகவல் கொடுத்த அமைச்சர்? -  கொந்தளிக்கும் விவசாயிகள்

இது வரை இந்த அணை 18 முறை நிரம்பி வழிந்து தண்ணீர் வீணாகியுள்ளது. உப்பாறு கால்வாயை அமராவதி அணைகால்வாய் வழியே இணைப்பதுதான் சாத்தியமானது. ஆனால், அருகில் ஓடிக்கொண்டிருக்கும் அமராவதி கால்வாயுடன் உப்பாறு வாய்க் கால் இணைக்கப்படவில்லை.

5 லட்சம் ஏக்கர் பாசனம் கொண்ட பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து ஒரு மடை பாசன முறையில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 90 நாட்கள் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. இதில் ஒரு விவசாயிக்கு 10 நாட்கள் ம‌ட்டுமே முறை நீர் கிடைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் பி.ஏ.பி. விவசாயிகளுக்கு மேலும் சோதனையாகி விட்டது முதல்வரின்  இந்த அறிவிப்பு.

' பொதுப்பணித்துறை அமைச்சரின் சொந்த ஊர் தாராபுரம் அடுத்துள்ள கள்ளிவலசு. இந்த ஊரில் உள்ள  சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அமராவதி கால்வாய் தண்ணீரில் வளம் கொழிக்கிறது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சரின் பல ஏக்கர் வயல் வெளியும் அடக்கம்.  எங்கே, அமராவதி தண்ணீரை உப்பாறுக்கு திருப்பி விட்டால், எதிர்காலத்தில் அதுவே நிலைத்து, தனது நிலத்திற்கு பாசன நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்று பயந்த அமைச்சர், முதல்வருக்கு தவறான தகவல்களை எடுத்துச் கூறி, பி.ஏ.பி. வாய்க்காலையும் விவசாயிகளின் வாழவையும் தாரை வார்த்துள்ளார். முதல்வர் பி.ஏ.பி. விவாசாயிகளிடம் கருத்துக்கேட்டு, மறுபரிசீலனை செய்து திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்று சொன்னார் மதுசூதனன்.

 அரண்மனை முட்டை அம்மியையும் தகர்க்கும் என்பது இதுதான் போலிருக்கிறது!

ஜி.பழனிச்சாமி
படங்கள்:
தி.விஜய்