Published:Updated:

டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து கம்பெனிகள் தடை? - மெடிக்கல் 'ரெப்'கள் போராட்டம்

டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து கம்பெனிகள் தடை? - மெடிக்கல் 'ரெப்'கள் போராட்டம்
டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து கம்பெனிகள் தடை? - மெடிக்கல் 'ரெப்'கள் போராட்டம்

மதுரை: 'டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து கம்பெனிகளை தடை செய்யவேண்டும்'  மருந்து விற்பனை பிரதிநிதிகள் மதுரையில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இப்படியொரு கோஷம் ஒலித்தது!

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், "1947ம் ஆண்டு தொழில் தாவா சட்டத்தின் கீழ் தங்களை தொழிலாளியாக அங்கீகரிக்க வேண்டும், 8 மணி நேரம் மட்டுமே வேலை என்று நிர்ணயிக்க வேண்டும், டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நிறுவனங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து கம்பெனிகள் தடை? - மெடிக்கல் 'ரெப்'கள் போராட்டம்

சங்கத்தின் மதுரை மேற்கு கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மேற்கு கிளை செயலாளர் விவேகானந்தன், கிழக்கு கிளை செயலாளர் ஓம்பிரகாஷ், சி.ஐ.டி.யு. மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன், மாநில தலைவர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து கம்பெனிகள் தடை? - மெடிக்கல் 'ரெப்'கள் போராட்டம்

தங்களின் கோரிக்கை குறித்து விகடன் டாட் காமில் பேசிய நிர்வாகிகள், "மருந்து விற்பனைத் துறையில் பல்வேறு முறைகேடுகளும், உழைப்பு சுரண்டலும் நடக்கிறது. சில பணக்கார நிறுவனங்கள் டாக்டர்களுக்கும், பெரிய‌ மருத்துவமனைகளுக்கும் லஞ்சம் கொடுக்கிறது. விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்குகிறது. இவ்வாறு லஞ்சம் கொடுக்கும் நிறுவனங்களின் பட்டிய‌லை அரசுக்கு அனுப்பியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னமும் கூட இதுபோன்ற செயல்கள் தொடர்கின்றன.

##~~##
இதனால், பெரும்பாலான டாக்டர்கள் லஞ்சம் கொடுக்கும் நிறுவனத்தின் மருந்தைத் தான் எழுதுகிறார்கள். மற்ற மருந்துக் கம்பெனியின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும்  அதை நோயாளிகளுக்கு சிபாரிசு செய்வதில்லை. இது ஒருபுறமிருக்க, லஞ்சம் கொடுக்கிற நிறுவனத்திற்கு இணையாக, விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்று சிறு நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பிரதிநிதிகளை வற்புறுத்துகிறார்கள். குறிப்பிட்ட மாதத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை என்றால் வேலையைவிட்டே நீக்கிவிடுவோம் என்றும் துன்புறுத்துகிறார்கள்.
ஒரு நிறுவனத்தின் மருந்து பொருட்கள் விற்பனையாவதற்கு  விற்பனைப் பிரதிநிதி மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும்? கம்பெனியில் தயாரிப்பு தரமாக இருக்க வேண்டும். அதை விளம்பரப்படுத்த வேண்டும். டாக்டர்கள் மனது வைக்க வேண்டும். நோயாளிகளுக்கும் விலை கட்டுப்படியாக வேண்டும். இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் கொத்தடிமைகள் போல நாங்கள் நடத்தப்படுகிறோம்.
எனவே தான் எங்களை தொழிலாளிகளாக அங்கீகரித்து, 8 மணி நேரம் மட்டும் பணி நேரமாக அறிவிக்க வேண்டும் என்று போராடுகிறோம். ஆந்திரா, சட்டீஸ்கர், உத்தரகண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மெடிக்கல் ரெப்களை தொழிலாளிகளாக அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், அந்த மாநில அரசாணையைக் காட்டி கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறது" என்றனர்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா. காளிமுத்து