Published:Updated:

மதுவிற்கு எதிரான நடைபயணம்: கோவையில் தொட‌ங்கினார் காந்தியவாதி சசி பெருமாள்!

மதுவிற்கு எதிரான  நடைபயணம்: கோவையில் தொட‌ங்கினார் காந்தியவாதி சசி பெருமாள்!
மதுவிற்கு எதிரான நடைபயணம்: கோவையில் தொட‌ங்கினார் காந்தியவாதி சசி பெருமாள்!
மதுவிற்கு எதிரான  நடைபயணம்: கோவையில் தொட‌ங்கினார் காந்தியவாதி சசி பெருமாள்!

கோவை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி காந்தியவாதி சசி பெருமாள் இன்று கோவையிலிருந்து தொடர் நடைபயண பிரச்சார இயக்கத்தை துவக்கினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காந்தியவாதி சசி பெருமாள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்.ஏற்கெனவே சென்னையில்  34 நாட்கள் அவர் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் அடுத்தக் கட்டமாக அவர் 'மதுவிற்கு இறுதியாத்திரை என்ற பெயரில் தொடர் நடைபயண பிரசார இயக்கத்தை கோவையில் இன்று துவங்கினார்.

காந்தியடிகள் தண்டி யாத்திரையை நிறைவு செய்த நாளான இன்று துவங்கும் பிரச்சார பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 30 ம் தேதி சென்னை மெரீனா கடற்கைரையில் நிறைவடைகிறது. இந்த பயணத்தின் போது மது விலக்கின் அவசியத்தை அனைத்து தரப்பினருக்கும் விளக்கி பிரச்சாரம் செய்ய‌ இருப்பதாகவும், ஜனவரி 30 ம் தேதி சென்னையில் பிரம் மாண்டமான தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாகவும் சசிபெருமாள் தெரிவித்தார்.

##~~##
பிரச்சார நடைபயணம் கோவையில் 5 நாட்கள் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து திருப்பூர், ஈரோடு வழியாக‌ தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் கடந்து பயணிக்கிறது சசி பெருமாளின், மதுவிற்கு எதிரான பிரச்சார பயணம். கோவையில் பிரசார பயணத்தை துவங்கிய‌ சசி பெருமாளுக்கு மதுவிற்கு எதிரான பல்வேறு அமைப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரும் வரை தொடர்ந்து போரட்டங்களில் ஈடுபட போவதாக சசி பெருமாள் தெரிவித்துள்ளார்.
-ச.ஜெ.ரவி