Published:Updated:

காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!

காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!

ராமநாதபுரம்: தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இரா.மோகன்