Published:Updated:

நிலக்கரி பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலக்கரி பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்!
நிலக்கரி பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்!

நிலக்கரி பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக 2-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 1-வது யூனிட் நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அனல்மின் நிலைங்களில், தூத்துக்குடி அனல்மின் நிலையம் மிகவும் பழைமையானது. கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அனல் மின் நிலையத்தில், 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடைய 5 யூனிட்டுகள் உள்ளன. இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின் உறப்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இதிலுள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கும் மேலாக இயங்கிவருகிறது.

இதனால், அவ்வப்போது பழுது ஏற்பட்டு, மின் உற்பத்தி தடைபடுகிறது. இதில், சில சமயம் தண்ணீர் பற்றாக்குறையாலும் மின்  உற்பத்தி தடைபட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது எனப் பல கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சில நாள்களுக்கு முன்பு இங்கு ஆய்வுசெய்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில், வழக்கமாக 15 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்படும். ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு நிலக்கரி கிடைக்கிறது.  சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையினால் நிலக்கரி வரத்து குறைந்துள்ளது. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, பல மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள தடைதான். சில நாள்களில் சீராகிவிடும்” எனக் கூறினார். ஆனால், அனல்மின் நிலையங்களில் தற்போதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு