Published:Updated:

தெலுங்கானா போராட்டம்.. ஆந்திராவில் எகிப்தின் தாக்கம்!

ஹைதரபாத், மார்ச் 10,2011

தனி தெலுங்கானா மாநிலம் வலியுறுத்தி, ஹைதரபாத்தை நோக்கி பல்லாயிரக் கணக்கான தொண்டர்களுடன் வியாழக்கிழமை பேரணி நடத்த முயன்ற தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். ##~~##

ஆந்திராவைப் பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறது.

இந்நிலையில் இக்குழுவின் தலைவர் பேராசிரியர் கோதண்ட்ராம் இன்று ஹைதராபாத்தில் 10 லட்சம் தெலுங்கானா ஆதரவாளர்கள் பங்கேற்கும் 'million march to Hyderabad' என்ற பெயரில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

மதியம் 1 மணி முதல் 4 மணி வரை நடைபெறவிருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, தெலுங்கான ஆதரவு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடத்த போராட்டத்தின் தாக்கத்தில் இந்த வகையான எதிர்ப்புப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.கேசவ் ராவ் மற்றும் மது யாஷ்கி மீது செருப்பு வீச்சு தாக்குதலும் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள்.ஹைதரபாத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு