Published:Updated:

கோவை, திருப்பூரில் பஸ், கடைகள் மீது கல்வீச்சு: 25 பேர் கைது

கோவை, திருப்பூரில் பஸ், கடைகள் மீது கல்வீச்சு: 25 பேர் கைது
கோவை, திருப்பூரில் பஸ், கடைகள் மீது கல்வீச்சு: 25 பேர் கைது

கோவை: இந்து அமைப்புகள் சார்பில் நடந்து வரும் கடையடைப்பு போராட்டத்தையொட்டி, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் சில இடங்களில் பஸ்கள் மற்றும் கடைகள் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து அமைப்பினர் மீதான தாக்குதலை கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

3 மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

##~~##
இதனிடையே கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் 8 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் கோவையில் ஆர்.எஸ்.புரம், காந்தி பார்க், சிங்காநல்லூர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பஸ்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. திருப்பூரில் அவிநாசி, அவிநாசிபாளையம் பகுதியில் பஸ்கள் உடைக்கப்பட்டது.
இதேபோல், திருப்பூர், கோவையில் 7 இடங்களில் பேக்கரி, உணவகங்கள் மீது கல்வீசீ தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 25க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

ஜெ.ரவி