Published:Updated:

`300 குடும்பங்களின் கதறல் உங்கள் காதில் விழவில்லையா?’ - மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கண்ணீர்

`300 குடும்பங்களின் கதறல் உங்கள் காதில் விழவில்லையா?’ - மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கண்ணீர்
`300 குடும்பங்களின் கதறல் உங்கள் காதில் விழவில்லையா?’ - மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கண்ணீர்

300 குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா. மணல் அள்ளும் அரசியல்வாதிகளை விட்டுவிடுகிறார்கள். ஆனால், எங்கள் மீது வழக்குப் போடுகிறார்கள் என்ன கொடுமை. 30-ம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போகிறோம். அதன் பிறகு, பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மாட்டுவண்டித் தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

`300 குடும்பங்களின் கதறல் உங்கள் காதில் விழவில்லையா?’ - மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கண்ணீர்

அரியலூர் மாவட்டம் உதய நத்தம் கிராமத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உடையார்பாளையம் தாலுகாவில் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. மேலும், விவசாயம் அழிந்து வரும் நிலையில் அதன் உப தொழிலாக உள்ள மாட்டு வண்டித் தொழிலைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வாழ்வாதாரமாக இருந்த அண்ணக்காரன் பேட்டையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்த மாட்டுவண்டி மணல் குவாரியை மூடியது கண்டிக்கத்தக்கது. எனவே, மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அண்ணாகாரன் பேட்டையில் மூடிய மாட்டுவண்டி மணல் குவாரியை உடனே திறக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நவம்பர் 30-ம் தேதி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

`300 குடும்பங்களின் கதறல் உங்கள் காதில் விழவில்லையா?’ - மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கண்ணீர்

மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம். “அன்றாடம் பிழைப்புக்காக காலம், காலமாக மாட்டுவண்டிகள் மூலமாகச் சிறிய அளவிலான மணலை அள்ளிவருகிறோம். இதை நம்பி 300 குடும்பங்கள் உள்ளன. அரசின் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, போலீஸார் மாட்டுவண்டிகளைப் பறிமுதல்செய்து வழக்கு பதிவு செய்துவருகின்றனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வினர் பலர், இரவு நேரங்களில் லாரியில் மணல் கடத்துகிறார்கள். ஆற்றின் நடுவில் பொக்லைன் இயந்திரங்களை வைத்து மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்று புகார் கொடுத்தோம். அ.தி.மு.க-வினர் மீது வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், எங்களைக் கைது செய்வதாக மிரட்டுகிறார்கள். மாட்டுவண்டியில் மணல் எடுக்க மணல் குவாரி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம் என முடித்துக்கொண்டனர். கூட்டத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.