Published:Updated:

``நெடுவாசல் போன்ற போராட்டம்” -கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை மக்கள் எச்சரிக்கை

``நெடுவாசல் போன்ற போராட்டம்” -கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை மக்கள் எச்சரிக்கை

``நெடுவாசல் போன்ற போராட்டம்” -கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை மக்கள் எச்சரிக்கை

``நெடுவாசல் போன்ற போராட்டம்” -கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை மக்கள் எச்சரிக்கை

``நெடுவாசல் போன்ற போராட்டம்” -கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை மக்கள் எச்சரிக்கை

Published:Updated:
``நெடுவாசல் போன்ற போராட்டம்” -கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை மக்கள் எச்சரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள புனல்வாசல் கிராமம் உருகுலைந்து கிடக்கிறது. அப்பகுதி மக்களை அரசு அதிகாரிகள் இதுவரை சென்று பார்க்கவில்லை. அடிப்படை தேவைகள் எதையும்  நிறைவேற்றி தரவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இழப்புக்கு நீதி கிடைக்கும் வரை நெடுவாசல் கிராமத்தை போல் புனல்வாசலையும் மாற்றி போராட்டம் நடத்த போகிறோம் என கூறி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். 

பட்டுக்கோட்டை அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊரின் மொத்த வாழ்வாதரமாகவும் இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. 150 -க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்து வெறும் கூடுகளாய் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு நிலை குலைந்து காணப்படுகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட புனல்வாசல் மக்களை ஆறுதலுக்காக கூட எந்த ஒரு அரசு அதிகாரியும் சந்திக்கவில்லை. குடிநீர் மின்சாரம் ஏன் ஒரு வேளை உணவிற்கே வழியில்லாமல் விக்கித்து நிற்கிறோம் என்கிறார்கள். ``எங்க வீட்டு புள்ளையை இழந்த மன நிலையில் தான் நாங்க இருக்கிறோம். ஆனால் இந்த அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது” எனக் கூறி பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையான  புனல்வாசல் பகுதியில் சாலை மறியல் செய்தனர். மேலும் பெண்கள் தென்னை குலையை வைத்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவர்களிடம் பேசினோம், ``தென்னை மரங்களை எங்க வீட்டு பிள்ளைகளாகத்தான் நாங்க பராமரித்து வளர்த்து வந்தோம். அதில்தான் எங்க மூச்சு வாழ்வாதாரம் என அனைத்தும் அடங்கியிருக்கிறது. இந்த கஜா புயல் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அத்தனை தென்னைகளையும் ஒரே இரவில் சூறையாடி சென்று விட்டு  எங்களை தெருவில் நிற்க வைத்து விட்டது. சுமார் 5 லட்சம் வரையிலான மரங்கள் மண்ணில் செத்து கிடக்கிறது. வீடுகளை கூட விட்டு வைக்காமல் புயல் காற்று அரக்கனை போல் அடித்து நொறுக்கி விட்டு விட்டது. பெரும் பாராங்கல்லை தலையில் சுமக்கும் மன நிலையில் தாங்க முடியாத வலியுடன் தவித்து கொண்டு இருக்கும் எங்களை அரசு சார்பில் யாருமே வந்து பார்க்கவில்லை.

இது இன்னும் வலியை அதிகப்படுத்துகிறது. நாங்க உயிருடன் இருக்கிறோமா இல்லையா  என பார்ப்பதற்கும் ஒரு சொட்டு தண்ணீர் குடிப்பதற்கு கூட இங்கு வந்து ஏற்பாடு செய்து கொடுக்க வில்லை  இந்த அரசு.  இது எவ்வளவு பெரிய வேதனை. அதை கண்டிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். பெண்கள் அனைவரும் வீட்டு பிள்ளைகள் இழந்து விட்டது என கூறி ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் அரசின் காதுக்குத்தான் அவை கேட்கவே இல்லை. இந்த போராட்டத்ததோடு  நாங்கள் ஓய்ந்து விடப்பபோவதில்லை. எங்கள் ரணத்துக்கு நிவாரணம் கிடைக்கும் வரை  உயிர் பறிக்கப்பட்டு சாய்ந்து கிடக்கும் தோப்பையே போராட்ட களமாக மாற்றி போராட இருக்கிறோம். நெடுவாசல் போல் புனல்வாசலையும்  பெரும் போராட்ட களமாக மாற்றுவதுடன் கோட்டைக்கு எங்கள் குரல் கேட்கும் வரை தமிழக மக்களின் கவனத்தை எங்கள் ஊர் பக்கம் திருப்புகிற வகையில் எங்கள் இழப்புக்கு நீதி கிடைக்கும் வரை போராட போகிறோம்” என்றனர்.