Published:Updated:

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேலி வரை நீட்டிப்பு - ரயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேலி வரை நீட்டிப்பு - ரயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள்
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேலி வரை நீட்டிப்பு - ரயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சுவேலி வரை நீட்டிக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில், 5 எம்.எல்.ஏ-க்கள் உள்பட 150 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில். மாலை 5.40 -க்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த நிலையில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சிவேலி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் தினமும் சில மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச்செல்கிறது. இதனால், சென்னையில் பணி நிமித்தமாகச் செல்பவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. ரயில் நீட்டிப்புக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. அனந்தபுரி ரயில் முன்பு, சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகிய 5 எம்.எல்.ஏ-க்கள் உள்பட 150 பேர் கைதுசெய்யப்பட்டனர்.