Published:Updated:

விளை நிலங்களில் மின் கோபுரம் - ஓ.பி.எஸ் பாணியில் போராட்டம் நடத்திய கோவை விவசாயிகள்

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் 5 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் முன்பாக தியானம் செய்து அவரது ஆன்மாவிடம் முறையிடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 8 இடங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் காத்திருப்புப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் நடைபெற்று வரும் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இன்றைய தினம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு முன்பாக கீழே அமர்ந்த விவசாயிகள், சிலர் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தும் நூதன முறையில் தங்கள்  எதிர்ப்பினை தெரிவித்தனர்.

``விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் எனப்  பலமுறை தமிழக அரசிடம் முறையிட்டோம். எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால்தான், ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் முறையிட்டோம். கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி ஏற்பட்டபோது ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஆன்மாவிடம் முறையிட்டு பிரச்னைகளை தீர்த்ததைப் போல, தங்களது பிரச்னைகளையும் ஜெயலலிதா தீர்த்து வைப்பார் என நம்புகிறோம். நாங்களும் அ.தி.மு.க தான். தமிழக அரசு விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தினைக் கைவிட்டு, புதை வழித் தடங்கள் மூலமாக மின் கேபிள்களை அமைக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும்” என்று சுல்தான் பேட்டை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், உடனடியாக அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை எனில் இரு தினங்களில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.