Published:Updated:

`ஒருபக்கம் பிடிக்கிறாங்க; மறுபக்கம் விட்டுடுறாங்க!’ - நாய் முகமூடியுடன் போராடிய தொண்டர்கள்

`ஒருபக்கம் பிடிக்கிறாங்க; மறுபக்கம் விட்டுடுறாங்க!’ - நாய் முகமூடியுடன் போராடிய தொண்டர்கள்
`ஒருபக்கம் பிடிக்கிறாங்க; மறுபக்கம் விட்டுடுறாங்க!’ - நாய் முகமூடியுடன் போராடிய தொண்டர்கள்

தெருவில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி திருச்சியில் நாய் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

திருச்சியில் நாய்கள் அதிகமாகத் தெருக்களில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், தெருவில் நடக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் குற்றம்சாட்டும் மனிதநேய மக்கள் கட்சியினர் நாய் முகமூடி அணிந்து திருச்சி மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாகச் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்கக் கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது திருச்சி மாநகராட்சியில் அப்போது மாநகராட்சி ஆணையர் வெளியே சென்றுவிட்டதால் ஆணையருக்கு அடுத்த அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

நம்மிடம் பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த ஹாஜா என்பவரின் 7 வயதுக் குழந்தை ஜிகினி உறவினர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த தெரு நாய்கள் குழந்தையைக் கடித்துக் குதறியது. இதேபோல், தற்போது திருச்சி 12-வார்டு நத்தர்சா பள்ளி வாசல் பகுதியில் நாய்க்கடித்ததில் காயமடைந்த சிறுமி ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் திருச்சி 28வது வார்டு காமராஜர் நகரில் ஒருவரும், அரியமங்கலம், பாலக்கரை, வரகனேரி, பீமா நகர், கூனி பஜார், ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

பலர் நாய் கடித்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதனால் மேலும் பலர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நாய்களை ஒரு பகுதி பிடித்தாலும் அதை மற்ற பகுதிகளில் அதிகாரிகள் கொண்டு விடுவதால், நாய்களைப் பிடித்து பலன் இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனால் அதிகரித்து வரும் நோய் தொல்லைகளால், தெருவில் மனிதர்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்கள்.