Published:Updated:

``என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’’ - வேல்முருகன் ஆவேசம்!

என்.எல்.சி நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிபடி வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, உரிய இழப்பீடோ கொடுக்கப்படவில்லை. மாற்று இடம் வழங்கப்படவில்லை. என்எல்சி நிலம் கொடுத்து அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2007க்கு முன்பு நான் நடத்திய பல கட்டப் போராட்டங்களை நடத்தினோம். அதன் பின்பு பாதிக்கப்பட்டவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய நிலக்கரி துறை அமைச்சரை பார்த்தோம். ஆனால் எவ்வித பலனும் இல்லை

``என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’’ - வேல்முருகன் ஆவேசம்!
``என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’’ - வேல்முருகன் ஆவேசம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், ``என்.எல்.சி நிர்வாகம் புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட 26 கிராமங்களில் 5,000 ஹெக்டேர் சுமார் 12,500 ஏக்கர் பரப்பளவு உள்ள மூன்று போகம் விளையக்கூடிய நல்ல நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் நிலக்கரி வெட்டிச் சம்பாதித்து வட மாநில மக்கள் வாழ வைக்க ஒரு திட்டமிட்ட வேலையை மத்திய மோடி அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே நிலம் கொடுத்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிபடி வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, உரிய இழப்பீடோ கொடுக்கப்படவில்லை. மாற்று இடம் வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிலம் கொடுத்து அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2007-க்கு முன்பு எனது தலைமையில் பலகட்டப் போராட்டங்களை நடத்தினோம். அதன் பின்பு, பாதிக்கப்பட்டவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சரைப் பார்த்தோம். ஆனால், எவ்வித பலனும் இல்லை. மீண்டும் பல 
கட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, என்.எல்.சி நிர்வாகம் இறங்கி வந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

என்.எல்.சி சொல்வது ஒன்று, செய்வது வேறு. இங்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க மாட்டார்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய மாட்டார்கள். எங்கள் வீடு, நிலம், மண் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நாங்கள் சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான் சொல்கிறோம் இந்த என்.எல்.சி-க்கு ஒரு பிடி மண்ணைக்கூட தரமாட்டோம். காரணம் என்.எல்.சி ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள அந்த நிலங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், தமிழக அரசு கொடுத்துள்ள அனுமதி 2040-ம் ஆண்டு வரைதான். இந்தச் சுரங்கங்கள் இங்கு இயக்கும். இன்னும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 15,000 ஏக்கர் நிலங்கள் கரி வெட்டாமல் இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான மில்லியன் டன் கரி இருக்கிறது, இது போதுமானது. அதனால் புதியதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை. நிலம் கையகப்படுத்த உள்ள 26 கிராம மக்கள் தன்னிச்சையாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது முதற்கட்ட ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்தான்.

 ஏக்கருக்கு இவ்வளவு தருகிறோம், அவ்வளவு தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்ற முடியாது. நீங்கள் ஏக்கருக்குக் 10 கோடி கொடுத்தாலும் எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் நிலம் நெல், கரும்பு, வாழை, கத்தரி, பூ என அனைத்தும் விளையும் வளமான பூமி. அதில் கிடைக்கும் வருமானத்தில் தன்மானத்துடனும் மானத்துடனும், சுயமரியாதையுடன் வாழ்ந்துகொள்கிறோம். என்.எல்.சி நிர்வாகம் மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி நிலம் கையகப்படுத்த முன் வருமா? மாவட்டக் கலெக்டர் மத்திய அரசு சொல்கிறது, என்.எல்.சி நிர்வாகம் சொல்கிறது எனப் போலீஸுடன் வருவாய்த்துறையினரை அழைத்துக்கொண்டு இங்கு வந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இனியும் எங்களை ஏமாற்ற முடியாது. தொடர்ந்து போராடுவோம். இனி எங்கள் போராட்டம் வேறு மாதிரி இருக்கும். எனவே, தமிழக முதல்வர் உடன் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.