Published:Updated:

`தடை விதிக்காத பொருள்களுக்கும் அபராதம் விதிக்கிறாங்க?’ - குமுறும் வியாபாரிகள்

`தடை விதிக்காத பொருள்களுக்கும் அபராதம் விதிக்கிறாங்க?’ - குமுறும் வியாபாரிகள்
`தடை விதிக்காத பொருள்களுக்கும் அபராதம் விதிக்கிறாங்க?’ - குமுறும் வியாபாரிகள்

தடை செய்யாத பொருள்களுக்கும் அதிகாரிகள் அபராதம் வசூலிப்பதாக விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், உறிஞ்சுகுழல், பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் போன்ற 14 பொருள்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தடை செய்யப்பட்ட பொருள்கள் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு அனுமதித்துள்ள பொருள்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் தடை விதிப்பதாகக் கூறி வியாபாரிகள் சங்கத்தினர் விருதுநகர் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

`தடை விதிக்காத பொருள்களுக்கும் அபராதம் விதிக்கிறாங்க?’ - குமுறும் வியாபாரிகள்

இதுதொடர்பாக விருதுநகர் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளர் கார்த்திகேயன் கூறும்போது, ``ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை நாங்களும் வரவேற்கிறோம். இந்தப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம். மளிகைக் கடை, ஜவுளிக்கடை, பேன்சி பொருள்கள் கடை, பலசரக்குக் கடை போன்ற கடைகளில் முன்கூட்டியே பேக்கிங் செய்யப்படுகிறது. இதை பிரைமரி பேக்கிங் எனக் கூறுவோம்.

பிரைமரி பேக்கிங் செய்வதற்கான பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், இதற்கான பிளாஸ்டிக் பைகளையும் வைத்திருக்கக் கூடாது எனக் கூறி அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்கின்றனர். அரசு தடை செய்த பொருள்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். செய்யாத தவறுக்கு நாங்கள் அபராதம் செலுத்த முடியாது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே அதிகாரிகள் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், அபராதத்தொகை மிக அதிகமாக உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்தால் வியாபாரிகளிடம் அபராதம் விதிக்காமல் அந்தப் பொருள்களை எடுத்துச் செல்லலாம்'' எனத் தெரிவித்தார்.