Published:Updated:

`கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டங்கள் தொடரும்!’ - கொதிக்கும் சாலைப் பணியாளர்கள் சங்கம்

`கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டங்கள் தொடரும்!’ - கொதிக்கும் சாலைப் பணியாளர்கள் சங்கம்
`கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டங்கள் தொடரும்!’ - கொதிக்கும் சாலைப் பணியாளர்கள் சங்கம்

 ஐந்து அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி,தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கரூரில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கரூர் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்டத் தலைவர் செவந்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் மகாவிஷ்ணன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு ஆய்வக நுட்பனர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.செல்வராணி ஆகியோர் கலந்துகொண்டு, சாலைப் பணியாளர்கள் கோரிக்கையை ஆதரித்துப் பேசினார்கள்.

இதுபற்றி, கரூர் மாவட்டச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``சாலைப் பணியாளர்கள் பணி நீக்க காலமான 41 மாத காலத்தைப் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையைப் பராமரிக்க தனியாருக்கு அனுமதி அளிக்கும் கொள்கை முடிவைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் எங்களது போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். அடுத்தகட்ட போராட்டமாக வரும் 25-ம் தேதி திருப்பூரில் முரசு கொட்டும் போராட்டமும் அடுத்த மாதம்  பிப்ரவரி 25-ம் தேதி சென்னையில் சாலைப் பணியாளர்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டமும் நடைபெறவுள்ளது’’ என்றார்.