Published:Updated:

எலிக்கறி உண்ணும் போராட்டம் - நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு விவசாயிகள் வேதனை

எலிக்கறி உண்ணும் போராட்டம் -  நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு விவசாயிகள் வேதனை
எலிக்கறி உண்ணும் போராட்டம் - நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு விவசாயிகள் வேதனை

கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை பெற்றுத் தர கோரி விருத்தாசலத்தில் விவசாயிகள் எலி, பாம்பு கறிசாப்பிட்டு  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
 

விருத்தாசலம் பாலகரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை கேட்டு விவசாயிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர்ந்து நடந்து வருகிறது.  

இதில் 2016-17  மற்றும் 2017 -18 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை  வழங்காத ஆலை நிர்வாகத்திடம் இருந்து பணத்தை பெற்றுத் தர வேண்டும், ஐந்து ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள பாக்கி தொகை  சுமார் ரூபாய் 93 கோடியை உடனே வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி காத்திருக்கும் போராட்டம் அறிவித்து முதல் நாள் காத்திருக்கும் போராட்டமும், இரண்டாவது நாள் உடலில் நாமம் அணிந்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மூன்றாவது நாளாக எலி, பாம்பு கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். கடும் பனி பொழிவு இருந்த போதிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து இரவிலும் நடத்தி வருகின்றனர்.