Published:Updated:

மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளுடன் விவசாயிகள் நடத்திய நூதனப் போராட்டம்!

மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளுடன் விவசாயிகள் நடத்திய நூதனப் போராட்டம்!
மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளுடன் விவசாயிகள் நடத்திய நூதனப் போராட்டம்!

கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை பெற்றுத் தரக்கோரி மண்டை ஓடு வைத்து நூதன முறையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் பாலகரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சித்தூர் தனியார் சர்க்கரை  ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை கேட்டு விவசாயிகள் இன்றுடன் நான்காவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 2016-17  மற்றும் 2017-18ம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரையத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகத்திடம் இருந்து பணத்தை பெற்றுத் தர வேண்டும், ஐந்து ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது பாக்கி தொகை 40 கோடி ரூபாயை உடனே வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி காத்திருக்கும் போராட்டம் அறிவித்தனர்.

கடந்த 7-ம் தேதி காத்திருக்கும் போராட்டமும், 8-ம் தேதி உடலில் நாமம் அணிந்து அரை நிர்வாணப் போராட்டமும் 9-ம் தேதி எலி, பாம்பு கறி சாப்பிடும் போராட்டமும் நடத்தினர். நேற்று ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று மண்டை ஓட்டை வைத்து நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து மண் சாப்பிடும் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.