என்.எல்.சி நிறுவனம் தனது மூன்றாவது திறந்தவெளிச் சுரங்கத்துக்காக நெய்வேலி அருகே 40 கிராமங்களில் 4,842 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே சுரங்கங்கள் அமைக்கப்பட்டபோது, ஏராளமானோர் நிலம் வழங்கினர். அவர்களுக்கு என்.எல்.சி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. எனவே தற்போதைய திட்டத்தை, கிராம மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

என்.எல்.சி நிறுவனம், இரண்டு திறந்தவெளி சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டியெடுத்துவருகிறது. இப்போது மூன்றாவது சுரங்கம் தோண்டி, அதிலிருந்து 11.50 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்க என்.எல்.சி முடிவு செய்துள்ளது. இதற்காக நெய்வேலி அருகே எரும்பூர், அகரஆலம்பாடி, வீரமுடையாநத்தம், கொளப்பாக்கம், விளக்கப்பாடி, கம்மாபுரம் உட்பட 40 கிராமங்களில் 4,842 ஹெக்டேர் நிலத்தை 2,130 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு, என்.எல்.சி நிறுவனம் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியபோது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, மாற்று இடம், மாற்று மனை, மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகள் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அவற்றை முறையாகச் செய்யவில்லை என்று நிலம் கொடுத்தவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், அவுட் சோர்சிங் முறையில் வெளிமாநிலத் தொழிலாளர்களை என்.எல்.சி நிர்வாகம் பணிக்கு அமர்த்தியுள்ளது என்பது மக்களின் முக்கியக் குற்றச்சாட்டு. இப்போது, மூன்றாவது சுரங்கப் பிரச்னை கிளம்பியுள்ளது

என்.எல்.சி நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பு பேரவை பொதுச் செயலாளர் ஜானிடம் பேசினோம். “என்.எல்.சி நிர்வாகம் ‘ஆர் அண்ட் ஆர் திட்டம் 2007’-ன்படி மாற்று நிலம், மாற்று மனை வழங்கவில்லை. காலிப் பணியிடங்களில் 50 சதவிகிதம் வேலைவாய்ப்பை நிலம், வீடு இழந்தவர்களுக்கு வழங்கவில்லை. நிலக்கரி எடுத்தபின் காலியாக உள்ள நிலத்தை விவசாயிகளுக்குத் திருப்பித் தரவில்லை. என்.எல்.சி நிறுவனம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என்றார்.

அகரஆலம்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் மதியழகன், “ஏற்கெனவே நிலங்களைக் கொடுத்த விவசாயிகளை என்.எல்.சி ஏமாற்றிவருகிறது. இப்போது வெள்ளாறு, மணிமுத்தாறு பாசனப் பகுதியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளனர். வளமான விவசாய பூமியை எப்படி நிலக்கரி வெட்டுவதற்கு கொடுக்க முடியும்? ஏற்கெனவே நிலங்களை வழங்கிய விவசாயிகள் வறுமையில் வாடிக்கொண்டிருப்பது போதாதா? எங்கள் நிலத்தில் ஒருபிடி மண்ணைக்கூட என்.எல்.சி-க்குக் கொடுக்கமாட்டோம்” என்றார் ஆவேசமாக.

நடுநாடு பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த நெய்வேலி செல்வம், “நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. தவிர, எங்கள் நிலத்தையும் கொடுத்துவிட்டு ஒப்பந்தத் தொழிலாளியாகவே வாழ்க்கையைத் தொடங்கி, அப்படியே ஓய்வுபெறும் நிலைதான் உள்ளது. இதுவரை எத்தனை ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது என்பது குறித்தும், நிலம் கொடுத்த மக்களுக்கு என்ன செய்துள்ளனர் என்பது குறித்தும் என்.எல்.சி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். ஏமாற்றுகிறது என்.எல்.சி இனியும் ஏமாறத் தயாராக இல்லை” என்றார் தெளிவாக.

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிஜாமுதீன், “மூன்றாவது சுரங்கத்தை அமைக்கும் முன்பு, பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டத்தைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்த வேண்டும். ஆனால், இந்தக் கூட்டம் என்.எல்.சி-யால் நடத்தப்படுகிறது. அங்கு, முதல் வரிசையில் என்.எல்.சி உயரதிகாரிகள் அமர்ந்துள்ளனர். பொதுமக்களும், விவசாயிகளும் பின்னால் அமர்ந்துள்ளோம். நாங்கள் எப்படி எங்களின் கருத்துகளைச் சுதந்திரமாக மாவட்ட ஆட்சியரிடம் சொல்ல முடியும்” என்றார் வேதனையுடன்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு - என்.எல்.சி) சந்திரசேகரனிடம் கேட்டோம். “மூன்றாவது சுரங்கம் அமைக்க கம்மாபுரம் பகுதியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் என்.எல்.சி நிர்வாகம் அனுமதி வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்தே, 26 கிராமங்களில் நிலம் ஆர்ஜிதம் செய்வது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் நெய்வேலியில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. நிலம் எடுப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசுக்கும் தெரிவித்துள்ளோம். இனி மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக உலக நாடுகள் பலவும் மாற்று எரிபொருள் திட்டங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், நாம் இன்னமும் நிலக்கரிக்காக விவசாயத்தை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

- ஜி.சதாசிவம், படங்கள்: எஸ்.தேவராஜன்