Published:Updated:

`பாதையைத் திறந்துவிடுங்கள்!’ - ரயில்வேக்கு எதிராகத் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

`பாதையைத் திறந்துவிடுங்கள்!’ - ரயில்வேக்கு எதிராகத் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்
`பாதையைத் திறந்துவிடுங்கள்!’ - ரயில்வேக்கு எதிராகத் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

கடலூரில் ரயில்வே பாதையை அடைத்ததால் மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் திருப்பாதிரிபுலியூர் அருகே உள்ள குப்பன்குளம் பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான பாதையைப் பல ஆண்டுகளாகப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக அந்தப் பாதையை அடைக்க ரயில்வே நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.  இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட தூரம்
சுற்றிச் செல்ல வேண்டும் எனக் கூறி மக்கள் ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் பேசிப் பார்த்துள்ளனர். ஆனால், அவர்கள் பாதையைத் தொடர்ந்து அடைத்து வந்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் வரும் நேரம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்திய மக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ செல்லும் அளவுக்கு வழி விட்டு மீதி பாதையை அடைக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.