Published:Updated:

அத்துமீறிய 9 பேர்... அபராதம் விதித்த வனத்துறையினர்மீது வழக்கு... சர்ச்சையில் இன்ஸ்பெக்டர்

அத்துமீறிய 9 பேர்... அபராதம் விதித்த வனத்துறையினர்மீது வழக்கு... சர்ச்சையில் இன்ஸ்பெக்டர்
அத்துமீறிய 9 பேர்... அபராதம் விதித்த வனத்துறையினர்மீது வழக்கு... சர்ச்சையில் இன்ஸ்பெக்டர்

க்ஸல் தடுப்புப் பிரிவு சிறப்பு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, வனத்துறை ஏ.சி.எஃப்.ஓ. உள்பட 14 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் வரும் மலைகளில் 40-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. அதில், தச்சமலை என்ற வன கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப் செல்வதாகக் கூறி 9 பேர் கொண்ட குழு ஜீப்பில் சென்றது. பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் வனப்பகுதியில் வைத்து, வனத்துறை ஊழியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதில், 8 பேர் வன ஆர்வலர்கள் என்றும், ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டச் சென்ற வன கிராமத்தைச் சார்ந்தவர் எனவும் தெரியவந்தது. அவர் கூறியபடி வனக் கிராமங்களில் பொங்கல் விழா எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி, வனத்துறை ஊழியர்கள் அவர்களை வேளிமலை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் வனத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக ரூ.1000 அபராதம் விதித்தனர்.

இதற்கிடையில், அவர்கள் சென்ற ஜீப் நக்‌ஸல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்சனுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, சாம்சன் வேளிமலை வனத்துறை அலுவலகத்துக்குச் சென்று ஜீப்பைக் கேட்டுள்ளார். அப்போது வனத்துறை அதிகாரிகளுக்கும், இன்ஸ்பெக்டர் சாம்சனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சாம்சன் குலசேகரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வனத்துறை ஏ.சி.எஃப்.ஓ ஷாநவாஸ் உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நக்ஸல் தடுப்பு இன்ஸ்பெக்டர் பெயரைக் கூறிக்கொண்டு, வன ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் காட்டுக்குள் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதாக, வனத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இன்ஸ்பெக்டர் புகாரின் பேரில், வனத்துறை ஊழியர்கள்மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.