Published:Updated:

கூடங்குளம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: கூடங்குளம் அணுஉலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக தென் மாவட்ட மீனவர்கள் வரும் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி தள்ளுபடி செய்து அணுமின் நிலையம் செயல்பட அனுமதியளித்தது.

இந்த தீர்ப்பை நிராகரித்த பேராட்டக்குழுவினர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நேற்று மாலை இடிந்தகரையில் சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

சுப.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வரும் 14ஆம் தேதி கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை உள்ள கடற்கரை கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து அந்தந்த ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

##~~##
மேலும், கிராமம் கிராமமாக சென்று அணுஉலை ஆபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் என்றும் இதனையும் மீறி அணுமின் நிலையத்தை திறக்க முற்பட்டால் மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.