Published:Updated:

அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?

அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?
பிரீமியம் ஸ்டோரி
அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?

செந்தில் ஆறுமுகம், பொதுச் செயலாளர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?

செந்தில் ஆறுமுகம், பொதுச் செயலாளர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

Published:Updated:
அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?
பிரீமியம் ஸ்டோரி
அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?

ஜாக்டோ ஜியோவின் போராட்டம் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. சரி, இவர்களின் கோரிக்கை நியாயம்தானா? பார்ப்போம். 2003, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடரவேண்டும் என்பதுதான் இவர்களின் முக்கியக் கோரிக்கை. 2003-க்குப் பின்னர் பணியில் சேர்ந்து, ஓய்வுப்பெற்றப் பலருக்கும் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை. அதேபோல், சி.பி.எஸ் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்யப்பட்ட தொகை என்ன ஆனது என்று அரசு தெளிவுப்படுத்தவில்லை. எனவே, தங்களின் ஓய்வூதியப் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை என்று போராடுகிறார்கள் அரசு ஊழியர்கள்.

அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?

2003-ம் ஆண்டு, தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறிப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்தது அன்றைய அ.தி.மு.க அரசு. 2006-ல் அ.தி.மு.க தோல்வியடைந்தது. அப்போது தமிழகத்தின் கடன் தொகை 57 ஆயிரத்து 457 கோடி ரூபாய். மீண்டும் 2011 தேர்தலில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. அப்போது தமிழகத்தின் கடன் தொகை ஒரு லட்சத்து ஆயிரத்து 541 கோடி ரூபாய். அதாவது, கடன் தொகை இரு மடங்காகி, நிதிநிலை மேலும் நெருக்கடியான நிலையிலும் ஓட்டு வங்கி என்கிற ஒரே காரணத்துக்காகப் பொறுப்பில்லாமல் இந்த வாக்குறுதியை அளித்தார் ஜெயலலிதா. 2011-ல் கொடுத்த வாக்குறுதியை அ.தி.மு.க அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை. ‘சொன்னீர்கள்தானே செய்யுங்கள்’ என்று போராடுகிறது ஜாக்டோ ஜியோ. வாக்குறுதிகளை அள்ளிவிடுவதில் தி.மு.க-வும் சளைத்ததில்லை. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இது எவ்வளவுப் பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பலமுறை ஆட்சியில் இருந்த தி.மு.க-வுக்குத் தெரியாதா?

2008-2009-ல் 7,777 கோடி ரூபாயாக இருந்த ஓய்வூதியத் தொகை, 2018-2019-ல் 27,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமானால் இந்தத் தொகை இன்னும் உயர்ந்து, அரசுக்குக் கடும் நிதி நெருக்கடியை உருவாக்கும். ஒருகட்டத்தில் ஓய்வூதியமே கொடுக்க முடியாமல் அந்தத் திட்டமே திவாலாகலாம். இந்தப் பின்னணியையெல்லாம் யோசித்துத்தான் மத்திய அரசு தொடங்கி இந்தியாவின் ஒருசில மாநிலங்களைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. 

அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?

ஒன்று, தமிழக அரசு, ‘ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி இல்லை’ என்று அறிவிக்க வேண்டும். இல்லை, அமல்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஏற்பாடு செய்துவிட்டு அறிவிப்பு கொடுக்கவேண்டும். ஆனால், இரண்டும்கெட்டானாக, ‘ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துகிறோம்’ என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, திணறிவருகிறது. 2016, ஜனவரி 1-ம் தேதியிலிருந்து 21 மாதங்களுக்கு இவர்களுக்கான தொகை நிலுவையைத் தர வேண்டும். ஆனால், பொங்கலுக்கு அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசை வழங்கியது எவ்வளவு பெரிய துஷ்பிரயோகம்? இவை மட்டுமல்ல...

எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கு எந்த ஆசிரியர்களைப் நியமிப்பது என்பதில் இந்த அரசுக்குத் தெளிவு இல்லை. ஆயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகள், சத்துணவு மையங்கள் மூடப்படும் என்கிற அச்சம்... இவையும் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குக் காரணமாகின்றன.

‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே தாராளமாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. பணிப்பாதுகாப்பு இருக்கிறது. பிறகு எதற்குப் போராட்டம்?’ என்பதே பொதுமக்களின் பார்வை. அதுவும், அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வேலைக்காகவும் (விதிவிலக்காக சில அரசு ஊழியர்களைத் தவிர) மக்களை லஞ்சம் கேட்டு அலையவிடும் சூழலில், மக்களின் பார்வையைக் குற்றம்சொல்ல இயலாது. சுமார் ஏழு கோடி மக்களுக்கான பட்ஜெட்டில் சம்பளம், ஓய்வூதியத்துக்கு ஏற்கெனவே 40 சதவிகிதத் தொகையைப் பெற்றுவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாக உழைக்கிறோமா என்று தங்கள் மனசாட்சியிடம் கேள்விகேட்க வேண்டும். சிறு விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், சிறுதொழில் செய்வோர், தனியார் நிறுவனங்களில் சராசரி பொறுப்புகளில் பணிபுரிவோர் இவர்கள் யாரைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களில் எத்தனைப் பேர் உண்மையாக, நேர்மையாக உழைக்கிறார்கள் என்கிற கேள்வி இப்போராட்டத்தின்போது மக்களிடம் எழுவது தவிர்க்க முடியாதது.

எனவே, இந்தத் திட்டத்தில் திடமான ஒரு கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் அமல்படுத்திய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட பல்லாயிரம் கோடி நிதி குறித்து வெள்ளை அறிக்கை தர வேண்டும். நிலுவைத் தொகை, ஊதிய முரண்பாடுகள் இல்லாமல் ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும். வாக்கு வங்கிக்காக அஞ்சாமல், ஏழு கோடி மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளும் அரசாங்கமாகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமிழக அரசு.

படம்: வி.நரேஷ்குமார்