Published:Updated:

`இருந்த வேலையும் பறிபோயுள்ளது' - பட்டாசு ஆலைகளை திறக்ககோரி சிவகாசியில் மறியல்!

`இருந்த வேலையும் பறிபோயுள்ளது' - பட்டாசு ஆலைகளை திறக்ககோரி சிவகாசியில் மறியல்!
`இருந்த வேலையும் பறிபோயுள்ளது' - பட்டாசு ஆலைகளை திறக்ககோரி சிவகாசியில் மறியல்!

சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும். வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 34 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ``வேலைக் கிடைக்காமல் இங்கே லட்சக்கணக்கானோர் காத்துக் கிடக்கின்றனர். சிவகாசி பட்டாசு ஆலைகளை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால் தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் இருந்த வேலையும் பறிபோயுள்ளது. எனவே உடனடியாக பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.