Published:Updated:

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட எதிர்ப்பு: 3 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் வேளையில், அண்மையில், அணுமின் நிலையம் செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த போராட்டக் குழுவினர் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அணுமின் நிலைய செயல்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

##~~##
போராட்டத்திற்கு ஆதரவாக விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். கூடங்குளம், செட்டிகுளம் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.
போராட்டத்தையும் மீறி அணுமின் நிலையத்தை இயக்க அரசு முன்வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.