Published:Updated:

என்.எல்.சி. - ஒப்பந்த தொழிலாளர் சங்கம் பேச்சுவார்த்தை தோல்வி: 20 ஆம் தேதி வரை கெடு

சென்னை: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், மீண்டும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி மூப்பு அடிப்படையில் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மாவட்ட தொழில்நல ஆணையர், என்.எல்.சி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  அப்போது, நிர்வாக தரப்பில் பணிநிரந்தரம் செய்ய, இம்மாதம் இறுதி வரை கால அவகாசம் கேட்டனர். இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

##~~##
இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாவட்டச்செயலாளர் சேகர் கூறுகையில், வரும் 18ஆம் தேதிக்குள் பணி நிரந்தரத்திற்கான பட்டியலை வெளியிடவில்லை என்றால், 20ஆம் தேதி நெய்வேலியில் பேரவையை கூட்டி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க இருப்பதாக கூறினார்.
இதனிடையே, சி.ஐ.டி.யூ. ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.