Published:Updated:

அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் வால்பாறை - வியாபாரிகள் கடையடைப்பு!

அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் வால்பாறை - வியாபாரிகள் கடையடைப்பு!
அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் வால்பாறை - வியாபாரிகள் கடையடைப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருந்த, கோவை மாவட்டம் வால்பாறையில், தற்போது 48,000 மக்கள்தான் வசித்து வருகின்றனர். பெருகி வரும் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில், அடிப்படைத் தேவைகளுக்கே வால்பாறை மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான், மக்கள் தொகையும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வால்பாறை பகுதியைச் சுற்றுலாத் தலமாக அறிவித்து, அதன் வளர்ச்சிக்காக, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். வியாபாரிகள் மீது வரிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்.

வால்பாறையின் 21 வார்டுகளிலும் அதிகரித்து வரும் வன விலங்குகள் தொந்தரவைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வால்பாறை நகராட்சியில் இன்று வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கடையடைப்புப் போராட்டத்தில் சுமார் 85 சதவிகித கடைகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.